செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது
புதுவை கடற்கரையில் உருவாகி வரும் செயற்கை மணல் பரப்பு அருகில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை தலைமை செயலகம் எதிரே கடலில் ரூ.25 கோடி செலவில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது.
இதன் முதல்கட்டமாக அந்த பகுதியில் கரையையொட்டி கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டது பின்னர் கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. அந்த மணல்பரப்பினை கடல் அலை அரித்து செல்லாதவண்ணம் நிலையாக வைத்துக்கொள்ள 50 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளமும் கொண்ட சுமார் 900 டன் எடையுள்ள கூம்பு வடிவிலான இரும்பு மிதவையை கடலுக்குள் நிரந்தரமாக வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த மிதவையை கடலுக்குள் வைப்பதற்காக அந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டு சிமெண்டு கற்களை கொண்டு அடித்தளம் உருவாக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இரும்பு மிதவையை கடலுக்குள் இறக்கும் பணிகள் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கின.
இதற்காக மிதவையின் அடியில் அதிக எடையை தாங்கும் 26 ராட்சத பலூன்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் ஜே.சி.பி.க்கள் மூலம் மிதவையை கடலுக்குள் இறக்கும் பணி தொடங்கியது. ஒருபுறம் ஜே.சி.பி.க்கள் மிதவையை தள்ள அதனை கடலுக்குள் இருந்து 2 படகுகள் மூலம் இழுக்கும் பணியும் நடந்தது.
இதன் காரணமாக மிதவை அங்குலம் அங்குலமாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. 8 மணிநேர போராட்டத்துக்குப்பின் மாலை 6 மணி அளவில் முழுமையாக அந்த மிதவை கடலுக்குள் இறக்கப்பட்டது. இந்த பணிகள் விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
அந்த மிதவை பேரலையின்போது அடித்து செல்லாதவண்ணம் மணல் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஓரிரு நாட்கள் ஆகும். எனவே முதல்கட்டமாக அதற்குள் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. அதன்பின் மணலை அலை அரித்து செல்லாதவாறு சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.