போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ரூ.10¾ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
திருமுல்லைவாயல் அருகே போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ரூ.10¾ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆவடி,
திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் போலீஸ் சிறப்பு நலத்திட்டத்தின் கீழ் ரூ.10¾ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மணல் மற்றும் கார்பன் வடிகட்டி, இரும்புத்துகள் நீக்கி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளடக்கிய இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 1 மணி நேரத்துக்கு 2000 லிட்டர் குடிநீரை வழங்குகிறது.
சென்னை மண்டல போலீஸ் அணிகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 2, 3, 5, 13 மற்றும் படைப்பயிற்சி மைய அணிகளை சேர்ந்த போலீஸ்காரர்கள், அவர்கள் குடும்பத்தினர் 6 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.
மேலும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை 5-ம் அணி வளாகத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை எவ்வித பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காய்கறி தோட்டத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர்கள் விஜயகுமார், முகமது ஷகில் அக்தர், போலீஸ்துறை தலைவர் ஆயுதப்படை தமிழ்சந்திரன், போலீஸ்துறை துறைத்தலைவர் ஆயுதப்படை ஜெயகவுரி, மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் போலீஸ் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.