ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்றங்களை தடுக்க மோட்டார்சைக்கிள் ரோந்து போலீஸ் குழு அறிமுகம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்றங்களை தடுக்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ள மோட்டார்சைக்கிள் ரோந்து போலீஸ் குழுவின் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி தொடங்கி வைத்தார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையும், அதிகமான தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. அதன்காரணமாக விபத்து மற்றும் ஏதேனும் குற்றச்செயல்கள் குறித்து தகவல் வரப்பட்டவுடன் போலீசார் அந்த இடத்துக்கு உடனடியாக சென்றடைய முடியவில்லை.
போலீஸ் வாகனங்களில் செல்வதற்குள் குற்றச்செயல்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆகவே பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், குறித்த நேரத்துக்குள் குற்றம் நடைபெறக்கூடிய இடத்துக்கு சென்று சேர்வதற்கு வசதியாகவும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் உட்கோட்டத்தில் மோட்டார்சைக்கிள் ரோந்து போலீஸ் குழு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் ரோந்து போலீஸ் குழுவின் ரோந்து பணியை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த ரோந்து போலீஸ் குழுவில் தலைமை காவலர் மற்றும் ஒரு இளம் போலீஸ்காரர் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கென்று அதிவேக ஒலிபெருக்கியுடன் கூடிய மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளிலும், போலீஸ் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் இந்த ரோந்து போலீஸ் குழுவினர் மோட்டார்சைக்கிளில் விரைந்து சென்று குற்றங்களை தடுப்பார்கள்.
இந்த ரோந்து போலீஸ் குழுவில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உரிய நேரத்தில் தடுக்க முடியும்.
ஸ்ரீபெரும்புதுர் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுபற்றி அவர்களிடம் பேசி அறிந்து கொள்வதற்கு ரோந்து குழுவில் உள்ள போலீசாருக்கு அடிப்படை இந்தி மொழி கற்றுத் தரப்படஉள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் கோட்ட எல்லையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் போலீஸ்நிலைய தொலைபேசி எண், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் செல்போன் எண்கள்இருக்கும்.
இந்த அறிவிப்பு பலகையில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் கோட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.