சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை பகல் 12 மணிக்குள் கரைக்க வேண்டும்
மதுரையில் சதுர்த்தி விழாவில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலைகளை பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அப்போது பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்பவர்கள் கட்டுப்பாடுகள், வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு அடுத்த மாதம் 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை மதுரை மாநகரில் பல இடங்களில் வைத்து, ஓரிரு நாட்கள் கழித்து தனித்தனியாக ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியதன்படி சிலைகளை வைக்கவும், தண்ணீரில் கரைப்பதற்கும் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
விநாயகர் சிலைகளை வைக்க அமைப்பாளர்கள் தடையில்லா சான்றிழ்களை பெற்று, அந்த சான்றிதழ்களுடன் மதுரை மாநகர்களில் உள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்களிடம் உரிய முறையில் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலை துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒலி பெருக்கி அனுமதிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தடையில்லா சான்று பெற்று இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்புத் துறையினரிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம் இருந்தும் தற்காலிக மின் இணைப்பு குறித்த கடிதமும் பெற்று, சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனரிடமும் விண்ணப்பித்து விரைவாக அனுமதி பெற வேண்டும்.
விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மற்றும் வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது. சிலைகளில் தீட்டப்பட்டிருக்கும் வர்ணம் நீரில் கரையக்கூடியதாக, இயற்கையான சாயம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத அனுமதி பெறப்பட்ட இடத்தில் மட்டுமே சிலைகளை வைத்து 3 நாட்களுக்குள் கரைத்து விட வேண்டும்.
விநாயகர் சிலைகளை காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே பகல் 12 மணிக்குள் கொண்டுசென்று நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். மசூதிகள், சர்ச்சுகள் உள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைப்பதோ, ஊர்வலம் செல்வதோ, மத உணர்வை தூண்டும் கோஷங்கள் போடுவதையோ தவிர்க்க வேண்டும். வெடி பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. மைக் பயன்படுத்த காலை, மாலையில் தலா 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். சிலைகள் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் இருவரை நியமிக்க வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் சிலைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.