ஓசூரில் பரபரப்பு: மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்
ஓசூரில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் அரசு மதுக்கடை செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் அந்த மதுக்கடை மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் மதுக்கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் முதல் அந்த மதுக்கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், நேற்று வழக்கம்போல் மதுக்கடையை திறக்க பணியாளர்கள் கடைக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், ஓசூர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோரும் அங்கு வந்து கடையை மூட வலியுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடையின் ஷட்டரை இழுத்து மூடி கடைக்கு பூட்டு போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.