ரூ.524½ கோடி மோசடி வழக்கு: குமரி நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு
ரூ.524½ கோடி மோசடி வழக்கில் குமரி நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன சொத்துகள், நகைகளை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் களியக்காவிளை அருகில் உள்ள மத்தம்பாலையை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிர்மலன் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் மனுக்களும் பெறப்பட்டன. இதுவரை மொத்தம் 7,187 புகார் மனுக்கள் இந்த வழக்கில் பெறப்பட்டுள்ளன. அதன்படி புகார்தாரர்களிடம் மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.524 கோடியே 47 லட்சத்து 25 ஆயிரத்து 792 ஆகும். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள், அசையா சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.726 கோடி ஆகும். இந்த வழக்கில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். நிர்மலன் உள்பட 7 பேர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சொத்துகள், நகைகள், வாகனங்கள் ஆகியவற்றை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதுதொடர்பாக குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பால்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவில், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் நிர்மல் கிருஷ்ணா நிதி மற்றும் சிட்பண்ட் நிறுவனத்தில் வைப்பீடு செய்து, பணம் திரும்ப கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த பணத்தை திரும்ப வழங்குவதற்காக புதிதாக ஒரு குழு அமைத்து கீழ்கண்ட நடைமுறையின்படி அந்த குழு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
கோர்ட்டு அமைத்துள்ள குழுவில் ஓய்வு பெற்ற தாசில்தார் ஜாண் அலெக்சாண்டர், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பாசிகுமாரன் நாயர் மற்றும் அசோகன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். குமரி மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின் பொறுப்பு அதிகாரிக்கு இந்த குழு உதவியாக செயல்படும். இந்த குழுவின் அலுவலகம் மத்தம்பாலையில் ‘கிருஷ்ண நிவாஸ்‘ என்ற பகுதியில் 30-ந் தேதி முதல் செயல்படும்.
பதிவுத்துறை மற்றும் நில அளவைத்துறை மற்றும் இதர அரசுத்துறை அலுவலர்கள் இந்த குழு மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோர்ட்டு மூலம் தங்களுடைய இழப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்ள ஏதுவாக அவர்களுடைய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் அடையாள அட்டை விவரங்களை குழுவிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் ஒரு மாதத்தில் விற்பனை செய்ய முன்னுரிமை வழங்க கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நிதி நிறுவன வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், உற்பத்தி பொருட்கள், எந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பெயரில் கண்டறியப்பட்ட அசையா சொத்துகள், பொது ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பணம் ஆகியவையும் முதலீட்டாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி திரும்ப ஒப்படைக்காதவர்களிடம் பணத்தை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு செயலை செய்தாலும் தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிபதியின் அனுமதி பெற்று சொத்துகளை பொது ஏலமிட்டு பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் அவர்கள் மூலமாகவே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.