சீர்காழி அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிப்பு விவசாயிகள் வேதனை
சீர்காழி அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம், விநாயக்குடி, செம்மங்குடி, கடவாசல், வடகால், எடமணல், திருமுல்லைவாசல், ஆமைப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள், அங்கு பாயும் பொறைவாய்க்காலை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பதை அறிந்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், சம்பா சாகுபடி செய்வதற்கு தங்கள் விளைநிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ஆனால், கடந்த மாதம் 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி தண்ணீர் தற்போதுவரை பொறைவாய்க்காலில் வராததால் சம்பா சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தாழந்தொண்டி, வழுதலைக்குடி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பாசன தண்ணீர் வராததால் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீரும் உப்புநீராக மாறி வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதுகுறித்து மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
திருமுல்லைவாசல், எடமணல், கடவாசல் உள்ளிட்ட பகுதிகள் கடைமடை பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளுக்கு பாசனநீர் முழுமையாக வராததால் உப்புநீர் புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடிநீரும் உப்பு நீராக மாறி வருவதால் இங்குள்ள மக்கள், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீரையே நம்பி உள்ளனர். மேலும் குடிநீர் இன்றி கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்து, பாசனத்திற்கு தேவையான அளவு வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.