அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வாய்க்காலை விவசாயிகளே சொந்த செலவில் தூர்வாரினர்
வலங்கைமான் அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வாய்க்காலை விவசாயிகளே சொந்த செலவில் தூர்வாரினர். தற்போது அந்த வாய்க்கால் மூலமாக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வலங்கைமான்,
கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக அங்கு உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான வெட்டாற்றிலும் தண்ணீர் செல்கிறது. ஆனால் வெட்டாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை.
வலங்கைமான் அருகே சித்தன்வாழூர் ஊராட்சியில் தென்கரை குச்சுபாளையம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள வாய்க்காலுக்கு வெட்டாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த வாய்க்கால் மூலமாக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் அணைகள் திறக்கப்பட்டு பல நாட்களாகியும் தென்கரை குச்சுபாளையம் வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் வாய்க் காலில் தண்ணீர் செல்ல முடியாதபடி புதர்கள் வளர்ந்திருந்தன. புதர்களை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் வாய்க்காலை தூர் வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாய்க்காலில் தண்ணீர் வராததால் தென்கரை குச்சுபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதர் மண்டி கிடக்கும் வாய்க்காலை தங்கள் சொந்த செலவில் தூர்வார விவசாயிகள் தீர்மானித்தனர்.
அதன்படி விவசாயிகள் ரூ.600 வீதம் வசூல் செய்து வாய்க்காலை தூர்வாரி உள்ளனர். இதன் காரணமாக தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் சொந்த செலவில் தூர்வாரப்பட்ட வாய்க்கால் மூலமாக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.