ஆற்றுவெள்ளத்தில் சேதமான சாலை; போக்குவரத்து முற்றிலும் முடங்கியது 4 கிராம மக்கள் கடும் அவதி
மார்த்தாண்டம் அருகே அஞ்சாலிக்கடவில் ஆற்றுவெள்ளத்தில் சாலை அரிக்கப்பட்டு சேதமானது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் 4 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் இருந்து அஞ்சாலிக்கடவு என்ற இடத்துக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. இதன்வழியாக தினமும் ஏராளமான கார், வேன் போன்ற வாகனங்கள் மூலம் மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றன.
குறிப்பாக, மாராயபுரம், பாக்கோடு, பாறவிளை உள்பட 4 கிராமங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள், பொதுமக்கள் அதங்கோடு, குழித்துறை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக வந்து, படகு மூலம் ஆற்றை கடந்து மறுகரைக்கு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த சாலையின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
இதனால், இந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால், பாக்கோடு, பாறவிளை உள்பட 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
எனவே, ஆற்றின் கரையோர பகுதியில் தடுப்பு சுவர் கட்டி, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்த்தாண்டம் நற்பணி மன்ற தலைவர் சிந்துகுமார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.