மொபட் மீது லாரி மோதியதில் கணவன்- மனைவி பரிதாப சாவு
சேலம் அருகே ஐஸ் விற்க சென்றபோது மொபட் மீது லாரி மோதியதில் கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர்.
சேலம்,
சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவருடைய மனைவி லதா(40). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். லதா தனது கணவருடன் ஐஸ் வியாபாரத்திற்கு செல்வது வழக்கம். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு ஐஸ் விற்பதற்காக சண்முகம் நேற்று காலை தனது மனைவியுடன் மொபட்டில் சென்றார். அவர்கள் ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பார்சல் சர்வீஸ் லாரி இவர்களுடைய மொபட் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சண்முகம், லதா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கணவன்-மனைவி இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். லாரி மோதி கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.