மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பரிதாப சாவு

பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2018-08-22 23:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மஞ்சநாயக்கன் தண்டா பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது58), விவசாயி. இவர் நேற்று தோட்டத்தில் பறித்த பூக்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பொம்மிடிக்கு எடுத்து வந்தார். அப்போது மணலூர் ஒட்டுப்பள்ளம் அருகில் முத்தம்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கந்தசாமிக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் கந்தசாமியின் உடலை பார்த்து கதறி அழுதது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்