குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
உப்பிடமங்கலம்,
புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் பசுபதி பாளையம் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 108 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதுகலை விரிவுரையாளர் முருகபாண்டியன் தலைமை தாங்கினார். புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் வரவேற்றார். மலர் மெட்ரிக் பள்ளி தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
போட்டிகளுக்கு திருப்பதி, மணிமாறன், சதீஸ், முத்துசாமி, ஜெயசந்திரன், ராமசாமி உள்பட 52 உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீனதயாளன், காந்திகிராமம் லார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முடிவில் மாயனூர் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவுசல்யா நன்றி கூறினார்.