கரூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
கரூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.;
அரவக்குறிச்சி,
தியாக திருநாள் என போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று முஸ்லிம்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த ஏதுவாக பள்ளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி தலைமையில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.
பள்ளப்பட்டி மேற்கு, கிழக்கு, ஷாநகர் பள்ளிவாசல் உள்பட பல பள்ளிவாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சில பள்ளிவாசல்களில் ஆட்டிறைச்சியை ஏழை முஸ்லிம்களுக்கு குர்பானி கொடுப்பதாக கூறி தானமாக வழங்கினார்கள். அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர்- கோவை ரோட்டில் உள்ள ஈத்கா மஸ்ஜிது பள்ளிவாசல், கரூர் சின்ன, பெரிய பள்ளிவாசல், சின்னதாராபுரம், மைலம்பட்டி, தரகம்பட்டி, ஈசநத்தம், குளித்தலை, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.