திருச்சி முக்கொம்பில் 182 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் அணைக்கட்டு இடிந்து விழுந்தது
திருச்சி முக்கொம்பில் 182 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் அணைக்கட்டு இடிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருச்சி,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக திருச்சி முக்கொம்பில் வாத்தலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கி.பி. 1836-ம் ஆண்டு ஆர்தர் கார்ட்டர் என்ற பொறியாளரால் அணை கட்டப்பட்டது. 630 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாக தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். இதற்கு முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கட்டு என பெயர்.
அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் முழுவதும் காவிரியில் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த அணையில் உள்ள மதகுகளின் வழியாக தான் கொள்ளிடத்தில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை கட்டி 182 ஆண்டுகள் ஆகி மிகவும் பழமை அடைந்து விட்டதால் பாலத்தில் உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 11-ம் எண் மதகு வரை உள்ள 6 தூண்கள் திடீரென இடிந்தது. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன. தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி- சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள மதகுகளின் வழியாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தான் 8.30 மணி அளவில் 6 தூண்கள் இடிந்து விழுந்து இருக்கிறது. இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
முக்கொம்புக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றாலும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.கொள்ளிடம் அணைக் கட்டு இடிந்து விழுந்ததை தொடர்ந்து திருச்சியில் இருந்து கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கொம்புக்கு விரைந்து உள்ளனர். இடிந்து விழுந்த அணைக்கட்டில் மீட்பு நடவடிக்கைகளை செய்வது தொடர்பான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.