குடகில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்: 5 பேரின் உடல்கள் மீட்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நிவாரண பொருட்களும் குவிந்த வண்ணம் உள்ளன.;
குடகு,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையாலும், நிலச்சரிவாலும் குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக சுமார் 4 ஆயிரம் பேர், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் மொத்தம் 41 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய விமான படை, கடலோர காவல் படை, தீயணைப்பு படை, தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கனமழை, நிலச்சரிவால் குடகு மாவட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடகு மாவட்டத்தில் மடிகேரி, மக்கந்தூர், ஆலேறி, சுண்டிகொப்பா, பாலூர், கல்லூர், தொட்டகுந்துபெட்டா, ஜோடுபாலா, சம்பாஜே ஆகிய பகுதிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து வந்த கனமழை தற்போது குறைந்துள்ளது. முக்கொட்லுவை தவிர மற்ற பகுதிகளில் நேற்று வெயில் அடித்தது. முக்கொட்லு பகுதியில், பலத்த காற்று வீசியதுடன், மழை பெய்யும் சூழலும் நிலவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடகில் சூரியன் வெளியே வந்துள்ளதால், அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்காரணமாக, குடகு மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் குடகிற்கு வந்து மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் உணவு பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மைசூருவில் இருந்து துணிகளும் விமானத்தில் குடகிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குடகு மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை சேதங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 8 ஹெலிகேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் மூலம், முக்கொட்லு உள்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில், கிராமங்கள் எந்த நிலையில் உள்ளது. எவ்வளவு சேதமடைந்துள்ளது. அங்கு யாராவது சிக்கி உள்ளனரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் தேடுதல் பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது.
அப்போது, முக்கொட்லு பகுதியில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை. இதேபோல, மக்கந்தூர் அருகே எம்மேதாளு கிராமத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி, வீட்டுக்குள் பிணமாக கிடந்த சந்திரவதி, அவருடைய மகன் உமேஷ் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மடிகேரி அருகே அஜ்ஜரபாடி கிராமத்தில் கூலி தொழிலாளியான பவன் (வயது 37) என்பவரின் உடலையும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களின் 5 பேரின் உடல்களும் மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆபத்தான பகுதியில் யாராவது சிக்கி உள்ளனரா? மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஏதாவது உடல் கிடக்கிறதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்பேரில் நேற்று குடகு மாவட்டத்துக்கு தேசிய புவியியல் ஆராய்ச்சி மைய (என்.ஜி.ஆர்.ஐ.) விஞ்ஞானிகள் வந்தனர். விஞ்ஞானி ராகவன் தலைமையிலான அதிகாரிகள் மடிகேரிக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள், மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் குடகில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

குடகில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் 40 கிராமங்கள் மாயமாகி உள்ளது. 123 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் சேதமடைந்துள்ளது. 845 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன. 778 வீடுகள் சேதமடைந்துள்ளன. 58 பாலங்களும், 278 அரசு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடிந்த வீட்டில் மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த நகை-பணத்தை தேடிய குடும்பம்
குடகு மாவட்டம் ஹச்சிஹொலே கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு வருகிற 30-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக உமேஷ் நகை-பணத்தை சேமித்து வீட்டு பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய அவருடைய வீடு இடிந்து போனது. அதிர்ஷ்டவசமாக உமேஷ் தனது குடும்பத்தினருடன் உயிர் பிழைத்தார்.

தற்போது அவர்கள் நிவாரண முகாமில் தங்கி உள்ளார். இந்த நிலையில், மகளின் திருமணத்துக்காக சேமித்து வைத்துள்ள நகை-பணம் அடங்கிய பீரோவை அவர் தனது இடிந்த வீட்டில் குடும்பத்துடன் தேடிய சம்பவம் நெஞ்சை உருக்க வைத்துள்ளது. இதுகுறித்து உமேஷ் கூறுகையில், ‘வருகிற 30-ந் தேதி எப்படியாவது எனது மகளின் திருமணத்தை நடத்தி விடுவேன்’ என்று கண்ணீருடன் கூறினார்.
பி.யூ. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச மதிப்பெண் சான்றிதழ்கள்
குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வீடு, உடைமைகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். மேலும், வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த மாணவ-மாணவிகளின் படிப்பு சான்றிதழ்களையும் தண்ணீர் அடித்து சென்றுள்ளது. இதனால், மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பி.யூ. கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதை பெற விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரிடம் விவரங்களை எழுதி கொடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பி.யூ. கல்வித்துறை துணை இயக்குனரால் சரிபார்க்கப்பட்டு மீண்டும் மாணவ-மாணவிகளுக்கு பி.யூ. 2-ம் ஆண்டு இலவச மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், மழை வெள்ளத்தின் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பி.யூ. கல்லூரிகளில் விடுமுறை நாட்களில் கல்லூரிகள் செயல்பட தொடங்கப்பட உள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு யோகா பயிற்சி
குடகில் மழை வெள்ளம், நிலச்சரிவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத மழை வெள்ள சேதத்தால் வீடுகளை இழந்து பரிதவிக்கும் மக்கள், 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உறவுகள், உடைமைகளை இழந்து பரிதவித்து வரும் மக்கள், நிம்மதியாக இருக்கவும், மனநிலையை ஒருநிலை படுத்தவும், மாநில அரசு சார்பில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள 41 நிவாரண முகாம்களிலும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.