தொண்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது

தொண்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-22 21:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா, தேளூர் அருகே உள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்வர மூர்த்தி தொண்டி போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர்களை போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு ஜே.சி.பி. எந்திரம், ஒரு டிராக்டர், ஒரு டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக மூப்பையூர் பிரசாத் (26), ஆண்டிப்பட்டி தாலுகா பிச்சபட்டி பாண்டி(20), சேனவயல் ராமு(40) ஆகியோர் மீது தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மல்லனூர் உடையார், மணிமுத்து, எம்.ஆர்.பட்டணம் மகாலிங்கம், கோவிந்தமங்கலம் நாகேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்