தண்ணீர் வராததை கண்டித்து குளத்தில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் வராததை கண்டித்து குளத்தில் இறங்கி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-22 22:45 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் தெற்கு பகுதியில் காவிரி ஆறும், வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆறும் செல்கிறது. தற்போது 2 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் கிராமத்தின் நடுவில் பொன்னியம்மன் கோவில் எதிரே உள்ள குளம் வறண்டு கிடக்கிறது.

இந்த குளத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், குளத்துக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் நேற்று பவனமங்கலம் கிராம மக்கள் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ½ மணி நேரம் நடந்தது.

தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு மற்றும் காவிரி கரையோரம் அமைந்த கிராமங்களில் உள்ள குளங்களில் நீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்