வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு எல்.ஐ.சி. காப்பீடு தொகை ரூ.80 ஆயிரத்தை வழங்கிய மாணவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி எல்.ஐ.சி. காப்பீடு தொகை ரூ. 80 ஆயிரத்தை நிவாரணமாக வழங்கினார். 16 டன் அரிசி மூட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்சி,
கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழை அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்களும், நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சி சார்பில் ஏற்கனவே ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுருதி என்பவர் தனது தந்தை கிருஷ்ணகுமாருடன் வந்தார். மாணவி சுருதி திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சுருதி கேரள மாநில மக்களின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.80 ஆயிரத்து 74-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் வழங்கினார்.
இது பற்றி சுருதி நிருபர்களிடம் கூறுகையில், ‘எல்.ஐ.சி. நிறுவனத்தில் தனது பெயரில் இருந்த காப்பீடு தொகை முதிர்ச்சி அடைந்ததால் அந்த தொகையை நிவாரண நிதிக்காக வழங்கியதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றபோது கேரள மாநில மக்கள் காட்டிய அன்பை மறக்க முடியாமல் தன்னால் இயன்ற வகையில் இந்த நிதியை வழங்குவதாகவும்’ கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை ஆகிய தாலுகாக்களை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கேரளாவிற்கு அனுப்புவதற்காக 16 டன் அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு வந்து இருந்தனர். கலெக்டர் ராஜாமணி இந்த லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அரிசி மூட்டைகள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாமி என்ற இடத்திற்கு செல்ல இருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி தெரிவித்தார். அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.