முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
கல்வி உதவித்தொகை
தொகுப்பு நிதி மூலம் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற அலுவலர் நிலைக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம். 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் குழந்தைகள் இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம்.
புதுடெல்லி மத்திய முப்படை வீரர் வாரியம் மூலம் வழங்கப்படும் பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கலாம்
எனவே தகுதியானவர்கள் வருகிற 31–10–2018–க்குள் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, 30–11–18–க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 0461–2321678 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.