378 மெட்ரோ ரெயில் பெட்டிகளை வழங்க 7 நிறுவனங்கள் இடையே போட்டி

மும்பையில் புதிதாக இரு வழித்தடங்களில் இயக்க தேவைப்படும் 378 மெட்ரோ ரெயில் பெட்டிகளை வழங்க 7 நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளன.;

Update: 2018-08-22 00:20 GMT
மும்பை,

மும்பையில் தகிசர் - டி.என்.நகர் இடையே மெட்ரோ 2ஏ, அந்தேரி கிழக்கு மற்றும் தகிசர் கிழக்கு இடையே மெட்ரோ 7 ஆகிய மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த இரு வழித்தடங்களிலும் இயக்குவதற்காக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) தலா 6 பெட்டிகள் கொண்ட 63 மெட்ரோ ரெயில்களை வாங்க முடிவு செய்து உள்ளது. இதன்படி மொத்தம் 378 மெட்ரோ ரெயில் பெட்டிகளை வாங்குவதற்கான முதற்கட்ட டெண்டர் நடவடிக்கைகள் டெல்லியில் நடந்தது.

இதில், மேற்படி 2 மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் தேவையான மெட்ரோ ரெயில் பெட்டிகளை வழங்குவதற்கு ஹூன்டாய் ரோடெம் கொரியா, பாம்பர்டயர் இண்டியா அண்டு பாம்பர்டயர் ஜெர்மனி, சி.ஆர்.ஆர்.சி. கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், டைடாகர் வேகன்ஸ் அண்டு டைடாகர் பிரேமா, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இண்டியா அண்டு அல்ஸ்டாம் எஸ்.ஏ. மற்றும் சி.ஏ.எப். இண்டியா அண்டு சி.ஏ.எப் ஸ்பெயின் ஆகிய 7 நிறுவனங்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தன.

இந்த நிறுவனங்கள் டெல்லியில் நடந்த டெண்டரில் கலந்து கொண்டன. இவற்றில் ஒரு நிறுவனம் மெட்ரோ ரெயில் பெட்டிகளை வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த தகவல் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்