நாமக்கல் மாவட்டத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை (வியாழக்கிழமை) 3 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளைமறுநாளும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை.
காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக இன்று 95 டிகிரியாகவும், நாளை மற்றும் நாளைமறுநாள் 93.2 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்சமாக 3 நாட்களும் 75.2 டிகிரியாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 85, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 3 நாட்களும் 45 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தென்மேற்கு பருவ மழைப்பொழிவு இன்னும் மாவட்டத்தில் நீடித்து வருகிறது. எனவே கிடைக்கும் நீர் வளங்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.