9-ம் வகுப்பு மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
ஈரோட்டில் நன்றாக படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு,
ஈரோடு காசிபாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. டிரைவர். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுடைய ஒரே மகள் நிகிதா (வயது 14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நிகிதா சரியாக படிக்காமல் இருந்தார். இதனால் அவர் பள்ளிக்கூட தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து வந்தார். நிகிதாவை படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் அறிவுறுத்தி வந்தனர்.
மேலும், நன்றாக படிக்க சொல்லி அவர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நிகிதா தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிஅளவில் ஈரோடு அருகே சாவடிபாளையம் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாளத்திற்கு நிகிதா சென்று உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரெயில் முன்பு அவர் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட நிகிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த நிகிதாவின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.