தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் நடக்கிறது - டாக்டர் ராமதாஸ்
‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் நடக்கிறது. ஆலை திறக்கப்பட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
வேலூர்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 நாட்களாக திறந்து விடப்பட்ட தண்ணீரில் 158.33 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இதற்கு காரணம் நீர்மேலாண்மை குறித்து இந்த அரசுக்கு தெரியாதது தான் காரணம்.
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் போதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் 60 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க முடியும். காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டி.எம்.சி.யாகும். அதில் 10 டி.எம்.சி. சகதி காணப்படுகிறது. அதனை தூர்வார வேண்டும்.
மேலும் அணையை 10 அடி உயரம் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணையில் கூடுதலாக 27 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அதனால் ஒரு பருவ பாசனத்துக்கு தேவையான நீரை சேமித்து வைக்க முடியும். இந்த திட்டம் சாத்தியம் என்று நீர்ப்பாசன வல்லுனர்கள் கூறி உள்ளனர். இதற்கான வரைபடத்தை தயாரித்து அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
காவிரி, கொள்ளிடம், பாலாறு ஆகிய ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாலாற்றில் தடுப்பணைகளை கட்டாமல் இருப்பதற்கு தி.மு.க. தான் காரணம். கடந்த 2006-11 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ‘நீங்கள் ஆட்சிக்கு வந்து தடுப்பணைகளை கட்டி கொள்ளுங்கள்’ என்று கிண்டலாக கூறினார். அதன் விளைவுதான் பாலாற்றில் தற்போது தண்ணீர் இல்லை.
பாலாற்றை வளமாக்க தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.648 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்குணத்தில் இருந்து கால்வாய் வெட்டி, அதனை வேலூரை அடுத்த அமிர்தி கல்லாற்றில் இணைக்க வேண்டும். இதன் தொலைவு 58 கிலோ மீட்டர் தான்.
இத்திட்டத்தால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை மாநில அரசு தாமதமாக்காமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அங்கு அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 4 வாரங்கள் அங்கு ஆய்வு செய்து அதனை சமர்ப்பிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாணையம் ஆணையிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இன்னும் 3 மாதத்தில் திறக்க வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஆலை திறக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு பாதுகாப்பில்லை. தற்போது லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்து வரும் உயரதிகாரியான ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதி கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதிவிசாரணை இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும். தொடர்ந்து தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரேநேரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஜெயில் கைதிகள் பரோலில் செல்ல சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளிடம் கையூட்டு பெறுவதை விட மிகவும் மோசமான செயல் எதுவும் இருக்க முடியாது. கைதிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்படுவதை மத்திய அரசு திட்டமிட்டே தாமதம் செய்கிறது. 7 பேரும் அதிக காலம் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
13 தொகுதிகள் உள்ள வேலூர் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக, அதாவது வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம் என 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பகுதிகளும் சிறப்பான வளர்ச்சி பெறும். தற்போதுள்ள கட்சிகளில் பா.ம.க.விற்கு மட்டுமே கொள்கைகள் உள்ளன. மற்ற கட்சிகளிடம் கொள்கைகள் இல்லை. கடந்த 1949-ம் ஆண்டு பகுத்தறிவு, தமிழ், மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளை அடிப்படையாக வைத்து தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த கொள்கையை தி.மு.க. இழந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், மாநில துணை பொதுச் செயலாளர் இளவழகன், மாநில முன்னாள் துணை பொதுச்செயலாளர் முரளி, மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் இருந்தனர்.