கண்டராதித்தம் பெரிய ஏரி மண்ணை திருச்சி–சிதம்பரம் சாலை விரிவாக்கப்பணிக்கு பயன்படுத்த வேண்டும்

கண்டராதித்தம் பெரிய ஏரி மண்ணை திருச்சி–சிதம்பரம் சாலை விரிவாக்கப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் கலெக்டரிடம் மனு.

Update: 2018-08-21 22:30 GMT

திருமானூர்,

கண்டராதித்தம் பெரிய ஏரி செம்பியன் மாதேவி பேரேரி மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, கருப்பையன், பாஸ்கர் ஆகியோர் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் பெரிய ஏரி சுமார் 460 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கண்டராதித்த சோழ மன்னரால் விவசாய பாசனத்துக்காக வெட்டப்பட்டது. அதன் பிறகு இந்த ஏரி இதுநாள் வரை தூர்வாரப்பட வில்லை. தற்போது இந்த ஏரி தூர்ந்து, சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடாக காட்சியளிக்கிறது. இதனை தூர்வார கோரி பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், திருச்சி–சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது. அதில் சாலையின் ஓரங்களில் தோண்டப்படும் பள்ளங்களில் கண்டராதித்தம் பெரியஏரி மண்ணை எடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதனால் ஏரி தூர்வாரப்படுவதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஏரியை தூர்வாரும் செலவினங்களும் குறையும், விவசாயத்துக்கும் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்