திருவெறும்பூரில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் பரிதாப முடிவு

திருவெறும்பூரில், வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-21 22:45 GMT

திருவெறும்பூர்,

திருச்சி திருவெறும்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் பாய்லர் ஆலை பயிற்சி பள்ளி அருகில் ஜூஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலெட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தனது கடின உழைப்பால் 3 பிள்ளைகளையும் சங்கரலிங்கம் என்ஜினீயரிங் படிக்க வைத்தார்.

இவரது 2–வது மகன் ஓரிஸ்ட்(வயது 23). கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படித்து முடித்தார். சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வேலை தேடினார். ஆனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த ஓரிஸ்ட் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓரிஸ்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்