ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி கொலை வழக்கில் 15 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக துப்புரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவசுந்தரமூர்த்தி (வயது 31). துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி கீவளூர் கிராமத்தின் குளக்கரை அருகே இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் தேவசுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.
விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கும், கீவளூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (21), மனோஜ் (19), கணேஷ் (20), கோபி (21), 18 வயதான 2 பேர், கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த அருள் (25), விமல் (28), வீரவேல் (25), டில்லி (25), ரஞ்சித்குமார் (24), வானவராயன் (25), முத்து (24), பிரவு (23), அஜித்குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அந்த தகராறின் அடிப்படையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தேவசுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.