கும்மிடிப்பூண்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-21 21:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 28). தச்சுத்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் நந்தகுமார், அவரது மனைவி ஷகிலா (23) மற்றும் நந்தகுமாரின் பாட்டி நாகம்மாள் (67) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த நந்தகுமாரின் மனைவி ஷகிலா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், நள்ளிரவிரல் நாகம்மாள் வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் மறைந்து இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டுக்குள் புகுந்ததாக தெரிகிறது. மேலும், வெளியே வந்த மர்ம நபர், சாலையில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி சென்றது தெரியவந்தது.

மேலும் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்