தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி
தமிழகம் முழுவதும் 1 கோடி பனை மரங்களின் விதைகளை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பனை விதைகளை ஊன்றி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
இயற்கை வளங்களை பாதுகாக்கவும் புயல் காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 1 கோடி பனை மரங்களின் விதைகளை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பனை விதைகளை ஊன்றி வருகின்றனர்.
சென்னையில் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு செழியன் தலைமையில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஊன்றி வைத்தனர்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு நிவாரண நிதியாக அறிவித்திருக்கும் ரூ.500 கோடி போதுமானதாக இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.