பாமணி ஆற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி குளங்களை நிரப்ப, புதிய திட்டம் வகுக்க வேண்டும்

பாமணி ஆற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மன்னார்குடியில் உள்ள குளங்களை நிரப்ப, புதிய திட்டம் வகுக்க வேண்டும் என டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-08-21 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரித்ராநதி தெப்பக்குளம் மற்றும் பாமணி ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதையை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு, குளங்களை நிரப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி, பாமணி உள்ளிட்ட ஆறுகளில் இந்த ஆண்டு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மன்னார்குடியில் உள்ள அரித்ராநதி தெப்பக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பவில்லை.

இந்த மாத இறுதிக்குள் மன்னார்குடி அரித்ராநதி தெப்பக்குளத்தை, பாமணி ஆற்று தண்ணீரை பயன் படுத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். வடவாறு மட்டுமின்றி பாமணி ஆற்றின் தண்ணீரையும் பயன்படுத்தி மன்னார்குடியில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்பும் வகையில் அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்