சென்னை கூரியர் நிறுவன மேலாளர் காரில் கடத்தல் 5 பேரிடம் விசாரணை
ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையம் எதிரே கூரியர் நிறுவன மேலாளர் காரில் கடத்தப்பட்டார். அவரை மீட்ட போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் நவசாத் அலகாம்(வயது 25). இவர் வால்டாக்ஸ் சாலையில் கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பார்க் டவுன் பகுதியை சேர்ந்த திலிப் சிங்(40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திலிப்சிங்கை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரும்படியும் நவசாத் அலகாம் நேற்று முன்தினம் யானைக்கவுணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(50) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திலிப்சிங்கை கடத்தியதும் அவரை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நெற்குன்றத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த திலிப்சிங்கை மீட்டனர்.
மேலும், சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளான மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த உமாசங்கர்(27), அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார்(27), நொளம்பூரை சேர்ந்த சிவராஜ் பிரசாத்(28), பெரம்பூரை சேர்ந்த கோகுல்(19) ஆகியோரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சவுந்தரபாண்டியன் திருமங்கலம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் பயன்படுத்தும் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அவர் ஆன்லைன் நிறுவனம் மூலம் ஊட்டச்சத்து பொருட்களை வாங்குவதற்காக ஆர்டர் செய்தார். அந்த ஊட்டச்சத்து பொருட்களை திலிப்சிங் வேலை செய்யும் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பி விட்டதாகவும், அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்று பணம் செலுத்தி பொருட்களை வாங்கி கொள்ளுமாறும் ஆன்லைன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சவுந்தரபாண்டியன் கூரியர் நிறுவனத்திற்கு சென்று தனக்கு வேண்டிய பொருட்களுக்காக ரூ.6 லட்சத்தை மேலாளர் திலிப்சிங்கிடம் கடந்த 8–ந்தேதி செலுத்தினார்.
அதற்கு திலிப்சிங் 2 நாட்களில் உங்கள் கடைக்கே பொருட்கள் வந்து விடும் என தெரிவித்தார். ஆனால் கூறியபடி பொருட்கள் வந்து சேரவில்லை. இதுபற்றி சவுந்தரபாண்டியன் திலிப்சிங்கிடம் கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. அவர் ஏமாற்றுவது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சவுந்தரபாண்டியன் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் திலிப்சிங் மீது கடந்த 15–ந்தேதி புகார் கொடுத்தார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸ் கமிஷனர் சிவகுமார், ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து திலிப்சிங்கிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து விசாரணை முடிந்து திலிப்சிங் வெளியே வந்தார். அப்போது வெளியே காருடன் நின்று கொண்டிருந்த சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து திலிப்சிங்கை காரில் கடத்தி சென்று ரூ.6 லட்சத்தை திருப்பி தரும்படி அடித்து உதைத்ததும் தெரியவந்தது.
மேலும், பிடிபட்ட சிவராஜ் பிரசாத் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் என்பதும் தெரியவந்தது. ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையம் எதிரே திலிப்சிங் கடத்தப்பட்டதால் இந்த வழக்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளான உமாசங்கர், அசோக்குமார், சிவராஜ் பிரசாத், கோகுல் ஆகியோரும் ஜெ.ஜெ.நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 5 பேரிடமும் ஜெ.ஜெ.நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.