தஞ்சையில் தனியார் நிதிநிறுவன களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுக்கான பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையில் தனியார் நிதிநிறுவன களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தனியார் நிதிநிறுவன களப்பணியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நிறுவன தலைவர் சையத்பஷீர் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சாயிமாலினி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தனியார் நிதிநிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளை ஏற்படுத்தி, அதற்கு களப்பணியாளர்களையும் நியமித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்வைப்பு, நிரந்தர வைப்பு திட்டங்களை பெற்றனர். அதன்படி ஏராளமானோர் முதலீட்டாளர்களாகவும், களப்பணியாளர்களாகவும் இணைந்தனர்.


இந்த நிலையில் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுவதாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் வணிகம் முற்றிலும் தடைபட்டது. பொதுமக்களும் தங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் களப்பணியாளர்களுக்கும் பலவிதமாக தொந்தரவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே மத்திய, மாநில அரசு மற்றும் செபி அமைப்பின் கவனத்திற்குகொண்டு சென்று உடனடியாக முதலீட்டாளர்களுக்கும் பணம் கிடைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மகாதேவன், கருப்பையா, கவியரசன், ரவிச்சந்திரன், கலியபெருமாள், மரியகிரகோரி மற்றும் தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் மனுவும் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்