குமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்
மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வமாக வந்து கொடுத்தனர்.
நாகர்கோவில்,
கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர வீடு, உணவு இன்றி ஏராளமானவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மழை வெள்ள சேதத்தை தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல குமரி மாவட்டத்தில் இருந்தும் கடந்த 18–ந் தேதி முதல் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தும் ஏராளமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
அதாவது பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், பால், மாவு, கிழங்கு வகைகள், பழ வகைகள், அரிசி, பருப்பு, சர்க்கரை, சேலை, பேன்ட், போர்வை, தலகாணி, துண்டு, உள்ளாடைகள், கட்டிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றன.
இந்த நிவாரண பொருட்களை தனித்தனியாக பிரித்து பார்சல் செய்யும் பணி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பொருட்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை பார்சல் செய்யும் பணியில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 4–வது நாளாக நேற்றும் ஏராளமான நிவாரண பொருட்கள் குவிந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சோப்பு, சேம்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றை பள்ளி மாணவ–மாணவிகளே வந்து கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இதற்காக மாணவ–மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இருந்து தங்களால் இயன்ற பொருட்களை அடம்பிடித்து வாங்கிக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர். பின்னர் அவை பள்ளி நிர்வாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
நேற்று வரை மொத்தம் 45 லாரிகளில் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் நிவாரண பொருட்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன.