குலசேகரன்பட்டினம் அருகே வேன்–கார் மோதல்; 8 பேர் காயம்

குலசேகரன்பட்டினம் அருகே வேன்–கார் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2018-08-21 21:15 GMT

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் அருகே வேன்–கார் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

வேன்–கார் மோதல்

நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் புதுமனையைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் பொன் பெருமாள் (வயது 30). இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களுடன் காரில் தூத்துக்குடியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (46). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா நெடுவாரி கிராமத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.

குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார்குடியிருப்பு விலக்கு அருகில் சென்றபோது, கார்–வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த பொன் பெருமாள் உள்ளிட்ட 4 பேரும், வேனில் இருந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அவர்கள் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்