கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-21 21:30 GMT

தென்காசி, 

கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி) மாநில நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி, எஸ்.இ.டி.சி தொழிற்சங்க தலைவர்களின் பயிற்சி முகாம் குற்றாலம் திரு.வி.க இல்லத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் சங்கரபாண்டி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி அப்பாத்துரை முகாமை தொடங்கி வைத்தார். சம்மேளன துணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், கமிட்டி தலைவர் ஈஸ்வரன், சம்மேளன உதவி தலைவர் ஆறுமுகம், பொது செயலாளர் லெட்சுமணன், தலைவர் செல்வராஜ், பொருளாளர் கஜேந்திரன் உட்பட பலர் பேசினார்கள்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு, செலவு பற்றாக்குறை, ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஓய்வுக்கால பண பலன்களை பாக்கியின்றி வழங்க வேண்டும். சாலை போக்குவரத்து மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும். தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப பணியாளர்களை அனைத்து பிரிவுகளிலும் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில், மத்திய சங்க பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்