உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-08-21 10:01 GMT
நெல்லை, 

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

64 மணி மண்டபங்கள்

தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்திடும் வகையில் தமிழகத்தில் 64 மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் 27 தலைவர்களுக்கும், பிற மாவட்டங்களில் 30 தலைவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் ஆண்டும் தோறும் பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.

தடுப்பணைகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. உபரி நீர் புன்னக்காயலில் கடலில் கலந்து வருகிறது. இதை தடுக்க தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். மேலும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நிவாரணம் வழங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்