என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது

புதுவை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியர் போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2018-08-21 00:04 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். கடந்த 14–ந் தேதி வழிமறித்து அவருடைய வீட்டு வாசலிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலை வழக்கில் பிரபு, தமிழரசன், மணிகண்டன், விக்கி ஆகியோர் ஏற்கனவே போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ரெயின்போ நகர் 9–வது குறுக்கு தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்கிற வேங்கையன் (வயது31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தனியார் நிறுவனத்தின் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடையே மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்