மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 100 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கேரளா விரைந்தனர்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக டாக்டர்கள், உதவியாளர்கள் அடங்கிய 100 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விமானம் மூலம் கேரளா விரைந்துள்ளனர்.
மும்பை,
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் பெய்துவரும் கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதனால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் மருத்துவ உதவிக்காக டாக்டர்கள், உதவியாளர்கள் என 100 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று 2 விமானங்கள் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் அவர்களுடன் கேரளா சென்றுள்ளார்.
இந்த குழுவில் ஜே.ஜே.மருத்துவமனை டீன் முகுந்த் தாய்டே உள்பட 55 டாக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 26 பேர் புனே சாசூன் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் உதவியாளர்களும், ஊழியர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர்கள் அங்கிருந்து உதவி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
கேரள அரசுடன் தற்போதைய மருத்துவ தேவைகள் குறித்து கிரிஷ் மகாஜன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக மராட்டிய அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அத்துடன் உணவு பொருட்கள், போர்வைகள், பால் பவுடர், துணிமணிகள், நாப்கின்கள் என சுமார் 30 டன் நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.