தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-08-20 22:30 GMT
கிருஷ்ணகிரி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் லண்டன்பேட்டையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். ராகுல் பேரவை தலைவர் விஜயராஜ் வரவேற்றார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யகணேஷ் ஆகியோர் ராஜீவ்காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி, எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி, பட்டதாரி அணி தலைவர் சரவணன், நிர்வாகிகள் ரங்கசாமி, சக்கரவர்த்தி, அமாவாசை, சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் ஹாஜித்பாஷா நன்றி கூறினார்.

ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி 4 முனை சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, பாலகிருஷ்ணன், முத்து, திருமால், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கி ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், முன்னாள் நகர தலைவர் தகடூர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் வட்டார தலைவர்கள் ஜனகராஜ், பூபதிராஜா, சரவணன், விஸ்வநாதன், வேலன், சுபாஷ், பொன்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பி.எஸ்.அக்ரகாரத்தில் நடந்த விழாவில் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வட்டார தலைவர்கள் மாதப்பன், காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் சிவலிங்கம், நிர்வாகிகள் ஆனந்தன், மனோகரன், செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கச்சேரிமேட்டில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர தலைவர் கணேசன், வட்டார தலைவர் வஜ்ஜிரம், நிர்வாகிகள் அருட்ஜோதிமுருகன், ஆறுமுகம், சிவலிங்கம், செல்வம், மோகன், சின்னராஜ், ராஜேந்திரன், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்