குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் புகார்

பழுதான மின் மோட்டரை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். விரைவில் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்

Update: 2018-08-20 22:15 GMT

சிவகாசி,

திருத்தங்கல் நகராட்சி 16–வது வார்டில் உள்ள சங்கால்நாயுடு தெருவில் 40–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மோட்டார் பழுதான நிலையில் அதை சரி செய்யக் கோரி அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் சரி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்துக்கு வந்த அப்பகுதி பெண்கள் பழுதான மின் மோட்டரை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். விரைவில் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்