பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கழுமலையாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி தாலுகா பகுதியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் கொண்டல், மேலத்தேனூர், நிம்மேலி, வள்ளுவக்குடி, மருதங்குடி, அகணி, தென்னங்குடி, மன்னங்கோவில், கோவில்பத்து, சீர்காழி, தாடாளன்கோவில், தென்பாதி, திட்டை, கைவிளாஞ்சேரி, தில்லைவிடங்கன், திருத்தோனிபுரம், செம்மங்குடி, புளியந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த பாசன வாய்க்காலை கடந்த சில ஆண்டுகளாக சீர்காழி பொதுப்பணித்துறையினர் சரியாக தூர்வாரவில்லை. இதனால் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் செடி-கொடிகள், மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கும் இடமாகவும் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. காவிரி கரைபுரண்டோடும் இந்த சமயத்தில் கூட மேற்கண்ட பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் உள்ளது. இந்த வாய்க்காலை முறையாக தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று கழுமலையாற்றில் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விவசாயிகள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்போது கூட இங்குள்ள கழுமலையாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. கிராமங்களில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக காவிரி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. எனவே, வீணாகும் காவிரிநீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கழுமலையாறு போன்ற பாசன வாய்க்கால்களில் அதிக அளவில் செல்லும் வகையில் திறந்துவிட வேண்டும். இல்லையென்றால் சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.