10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும் நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பல கடன் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இத்தகைய சங்கங்களில் மாத ஊதியம் பெற முடியாமல் தவிக்கும் ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வருவாய் துறையினர் மற்றும் கூட்டுறவு துறையினர் ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தும் முறையை ஒழித்து சுதந்திரமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுனர் இல்லாத நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு மாதம் ரூ.1,500 கூடுதல் படியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணை தலைவர் துரைக்கண்ணு பேசினார். மாவட்ட பொருளாளர் முத்து, நிர்வாகிகள் தங்கராஜ், பிச்சை, காமராஜ், அழகர் சாமி உள்ளிட்டோர் பேசினார்கள். தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில் இருந்து ஊர்வலமாக வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர் களும், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும் கலந்து கொண்டதால் போக்குவரத்து நெருக்கடி உண்டாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.