காட்டுவாரி வாய்க்காலில் கரை உடைப்பு விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
பிச்சம்பட்டி பகுதியில் காட்டுவாரி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
கிருஷ்ணராயபுரம்,
மாயனூர் கதவணை பகுதியிலிருந்து பிரிந்து விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படும் வகையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்காலிலிருந்து காட்டுவாரி கிளை வாய்க்கால் பிரிந்து கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, கோவக்குளம், தொட்டியபட்டி ஆகிய பகுதியிலுள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு நீரை கொடுத்துவிட்டு மீண்டும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் சேர்ந்துகொள்கிறது. தற்போது காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளதால் காட்டுவாரி வாய்க்காலிலும் நீர் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பிச்சம்பட்டி பகுதியில் காட்டுவாரி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகிலிருந்த விவசாய நிலங்களில் புகுந்தது. இத்தகவலை அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் சென்ற பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கரையின் உடைப்பை சரி செய்தனர். தண்ணீர் புகுந்த விவசாய நிலங்கள் தரிசு நிலமாக இருந்ததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.