திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி நேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-08-20 23:15 GMT
திருவள்ளூர்,

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார். அவரை பின்தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரஞ்சித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, அலுவலக மேலாளர்(நீதியியல்) பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் அரசு அலுவலர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்