விஷம் குடித்து பெண் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துக்கொண்டார்.
திருக்கோவிலூர் ,
திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி கலையரசி (வயது 35) ஆவார். இவருக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று கலையரசி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துவிட்டார். சற்று நேரத்தில் மயக்கம் அடைந்து விழுந்த கலையரசியை அக்கம், பக்கம் உள்ளவர்கள் பார்த்துவிட்டு உடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கலையரசி இறந்துபோனார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று கலையரசியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கலையரசியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரனை நடத்திவருகின்றனர்.