பார்வையை மீட்டுத்தந்த மரபணு கருவிழி செல்கள்
எலிகளின் மீது நடந்த ஆராய்ச்சியில் குருடாய் பிறந்த எலிக்குஞ்சு மரபணு கருவிழி செல்களால் பார்வை பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.;
நமது விழித்திரையில் உள்ள சில ஏற்பி செல்களே வெளியில் இருந்து வரும் ஒளி மற்றும் பிம்பங்கள் பற்றிய சமிக்ஞையை மூளைக்கு கடத்தி அவற்றை நாம் காட்சியாக காண துணை செய்கிறது. ஆனால் மூளை செல்களால் இத்தகைய விழிசெல்களை மறுஉற்பத்தி செய்ய முடிவதில்லை. எனவேதான் பார்வை இழந்தவர்களின் பார்வையை திரும்ப கொண்டுவர முடிவதில்லை.
ஸிப்ராபிஷ் எனும் மீன் இனத்தில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பார்வையுடன் தொடர்புடைய மூல செல்களை கண்டறிந்தனர். இவை முல்லர் ஜிலியா செல்கள் எனப்படுகிறது. இந்த செல்களே காட்சிகளை ஏற்கும் ராட்ஸ் செல்களாக பரிமாணம் அடைகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த ‘ேநஷனல் ஐ இன்ஸ்டிடியூட்’ மைய ஆய்வாளர் கிரீன் வெல் மற்றும் குழுவினர் இந்த விழிசெல்களின் பாதிப்பை மரபணு ரீதியில் சரிசெய்யும் யுத்தியை கண்டு பிடித்துள்ளனர். முதலில் ேடட்டா கேட்டனின் எனப்படும் ஒருபுரத மரபணுக்களை ஆரோக்கியமான எலியின் உடலில் செலுத்தினர். இது முல்லர் ஜிலியா செல்கள் பகுப்படைய உதவியது. சில வாரங்களில் அவை காட்சிகளை ஏற்கும் ராட் செல்களாக மாற்றமடைந்தது. மூளை செல்களுடனும் தொடர்பு கொண்டது. அடுத்தகட்டமாக பார்வையற்ற எலிக்குஞ்சு களுக்கு இந்த முறையில் மரபணு சிகிகிச்சை அளிக்கப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது. அவை காட்சிகளை காணும் திறன் பெற்றன.
இதையடுத்து மரபணு விழிசெல்கள் பார்வைக் குறைபாட்டை தீர்க்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள். மனிதர்களில் இந்த வகையில் பார்வையை மீட்க முடியுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர உள்ளது.