தங்கமும், பிளாட்டினமும் கலந்த புதிய உலோகம்

புதிய உறுதியான உலோக கலவையை உருவாக்கிய விஞ்ஞானிகள் தங்கமும், பிளாட்டினமும் கலந்த அதிக உறுதி கொண்ட புதிய உலோக கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

Update: 2018-08-20 10:23 GMT
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாண்டியா தேசிய ஆய்வக பொறியாளர்கள் மைக்கேல் சந்ராஸ் மற்றும் நிக் அர்கிபாய் ஆகியோர் இந்த புதுமை உலோகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதுவே இப்போது உலகில் உள்ள உறுதியான உலோக கலவை என்று உரிமை கோரி இருக்கிறார்கள். அவர்கள் 90 சதவீதம் பிளாட்டினத்தையும், 10 சதவீதம் தங்கத்தையும் கலந்து இந்த உலோக கலவையை உருவாக்கி இருக்கிறார்கள். இது இரும்பைவிட 100 மடங்கு உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இந்த உலோக கலவையில் இன்றைய டயர்களை முலாம் பூசிக் கொண்டால், பூமியை 500 முறை வலம் வந்தாலும் டயர்கள் தேயாது என்று உறுதியளிக்கிறார்கள். பிளாட்டினம்- தங்க உலோக கலவை முதன்முதலாக இப்போது உருவாக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் உருவாக்கியுள்ள உலோக கலவை மற்றும் தயாரிப்பு நுட்பம், அதன் உறுதித்தன்மையை தீர்மானிப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கள் ஆராய்ச்சி கட்டுரையை அவர்கள் ‘அட்வான்ஸ் மெட்டீரியல்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்