ராணுவத்தில், துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

துணை ராணுவ படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணிகளுக்கு 181 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நர்சிங், பார்மசி போன்ற துணை மருத்துவம் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-08-20 06:56 GMT
துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று சசாஸ்திரா சீமா பல். சுருக்கமாக எஸ்.எஸ்.பி. என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 181 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணிகளுக்கு நர்சிங் படித்த பெண்கள் 23 பேரும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் (பார்மசிஸ்ட்) - 18 இடங்களும், ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன்- 2 இடங்களும், டென்டல் டெக்னீசியன்-2 இடங்களும், ரேடியோகிராபர் 8 இடங்களும், ஸ்டெனோகிராபர்-54 இடங்களும் உள்ளன. ஹெட்கான்ஸ்டபிள் பிரிவில் 74 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பிரிவு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. 9-9-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி

பிளஸ்-2 படிப்புடன் ஜெனரல் நர்சிங், பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், டென்டல் ஹைஜீனிஸ்ட், ரேடியோ டயக்னாஸிஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தரத்தி லான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள், ஸ்டெனோகிராபர் மற்றும் ெஹட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

சப்-இ்ன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறமைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-9-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssbrectt.gov.in. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்