மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரி உள்ளது.
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) தனது கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சி.டி.இ.டி. எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கும், பட்டப்படிப்புடன், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளுக்கும், விண்ணப்பிக்கலாம். தாள் 1 அல்லது தாள் 2 இவற்றில் ஏதேனும் ஒன்றை எழுதும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.700-ம், இரண்டு தாளையும் எழுதுபவர்கள் ரூ.1200-ம், மற்ற பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350-ம், இரண்டு தாள் களுக்கு ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-8-2018-ந் ேததியாகும், கட்டணம் செலுத்த கடைசி நாள் 30-8-2018-ந் தேதியாகும்.
தேர்வுக்கான தேதி் பின்னர் அறிவிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வழியாக முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.