செங்கோட்டையில் இருந்து கழுதுருட்டிக்கு வாகன போக்குவரத்து

செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கழுதுருட்டிக்கு நேற்று அந்த மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2018-08-19 21:45 GMT
செங்கோட்டை,



தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பலத்த மழையால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் உருவாகியுள்ளது. தென்மலை அருகே சாலையில் மண் சரிவு, ரெயில்வே குகை பாதையில் மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் இருமாநில பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் கேரள மாநிலம் கழுதுருட்டியில் இருந்து செங்கோட்டைக்கு கேரள அரசு பஸ் வந்தது. பஸ்சை கண்டதும் பயணிகள் ஓடிச் சென்று எதுவரை செல்லும் என்று கேட்டனர். அதற்கு, கழுதுருட்டி வரை செல்லும். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் தென்மலை பஸ் வரும். பின்னர் அங்கிருந்து புனலூர் சென்று, எந்த ஊருக்கு செல்ல வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றனர். இதனை கேட்ட பயணிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று முதல் செங்கோட்டையில் இருந்து கழுதுருட்டிக்கு 3 பஸ்கள் இயக்கப்படுகிறது. கழுதுருட்டி வரை கார்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மண்சரிவுகளை சரிசெய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பணிகள் முழுமையாக முடிவு அடைந்த பின்னர் தான் போக்குவரத்து தொடங்குவதற்கு கேரள அரசு அனுமதிக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்