ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய இளம்பெண் ரெயில் சக்கரத்தில் சிக்கி பலி மும்பைக்கு தேர்வு எழுத வந்தவர்

மும்பைக்கு தேர்வு எழுத வந்த இளம்பெண் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போது ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2018-08-19 23:00 GMT
அம்பர்நாத், 

மும்பைக்கு தேர்வு எழுத வந்த இளம்பெண் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போது ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

இளம்பெண்

நாக்பூரை சேர்ந்த இளம்பெண் மினல் பாட்டீல் (வயது21). இவர் அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். அதன்படி மும்பை யில் நடந்த அந்த தேர்வை எழுதுவதற்காக சம்பவத் தன்று நாக்பூரில் இருந்து தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயி லில் மும்பை நோக்கி பயணம் செய்தார்.

அந்த ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது. அப் போது, மினல் பாட்டீல் ரெயில் நிற்பதற்கு முன்ன தாகவே தனது உடைமை களுடன் இறங்கி உள்ளார்.

சக்கரத்தில் சிக்கி சாவு

இதில் நிலைதடுமாறி அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத் திற்கும் உள்ள இடைவெளி வழியாக தண்டவாளத்தில் விழுந்தார். இதில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மினல் பாட்டீலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்